போரினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பெண்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்தியஉயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அம்பாறையில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் வை கே.சிங்ஹாவும் பெண் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரட்னவும் கையெழுத்திட்டனர்.
இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்போது 20 தலைமையாளர்களுக்கும் 100 கிராம மட்ட பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதித்தொகை 10 மில்லியன் ரூபாய்களாகும்.
ஏற்கனவே இவ்வாறான திட்டம் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com

























