திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் உள்ள நான்கு ஈழ அகதிகளில் நேற்று முன்தினம் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது குடும்பங்களுடன் இந்தியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரியே குறித்த அகதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவழக்கிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், இவர்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது.
தமது போராட்டத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும், பதில் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் குறித்த ஈழ அகதிகள் அறிவித்துள்ளனர்.
-http://www.tamilwin.com

























