தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை!– பந்துல குணவர்தன

panthuluஇலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்…

இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கவராதத்தை இல்லதொழிப்பதற்கு நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன் காரணமாகவே அரசியல் தலைவர்களை நாம் இழந்துள்ளோம். இறுதியாக படைகளின் சேனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அவருக்கு எதிராக எவ்வாறான விமர்சனங்கள் காணப்பட்டாலும் போரை முடிவுக்குக் கொண்டுவந்த கௌரவத்தை அவருக்கு வழங்க வேண்டும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் கூட்டுப்படுகொலை செய்யப்படவில்லை. எமது ஆட்சியில் வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்தியிருந்தோம்.

சிறுவர்களை படையில் சேர்த்துக்கொள்ள புலிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பேனா பிடிக்க வேண்டிய சிறுவர்களிடம் சயனைட் வில்லைகள் வழங்கப்பட்டன.

ராஜபக்ச அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு அந்தச் சிறுவர்களுக்கு தீர்வு வழங்கியது.

வடக்கு கிழக்கில் 193 மஹிந்ததோதய பாடசாலைகள் அமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: