இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத தடைக்கற்களாக இராணுவம்: சிறீதரன் எம்.பி

sritharan_mp_003கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று காலை 9.30மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமானது.

1. பூநகரி பிரதேச வைத்தியசாலைக்குரிய காணியை இராணுவம் அபகரித்ததால் பூநகரி வைத்தியசாலையில் குடிநீரைக்கூட பெறமுடியாத நிலை.

2. பாடசாலை அருகில் இராணுவமுகாம் நிம்மதியாக கல்வி கற்கமுடியாத நிலையில் கிளிநொச்சி பூநகரி விக்னேஸ்வரா மாணவர்கள்

3. நகரப் பாடசாலைக்குரிய காணியில் இராணுவம். கிளிநொச்சி மகாவித்தியாலய ஆரம்ப பிரிவை ஆரம்பிக்க முடியாத நிலை

4. இரணைதீவு விடுவக்கப்பட்டதாக குறிப்பிடடப்பட்டபோதும் கடற் தொழிலை மேற்கொள்ளமுடியாத நிலையில் மீனவர்கள்

5. பல மில்லியன் நிதிகள் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட போதும் நடைமுறையில் அபிவிருத்தியை காணோம்.

இதன்போது ஆரம்ப உரையை நிகழ்த்திய வடக்கு மாகாண முதலமைச்சர்,

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கினைப்புகுழு கூட்டங்கள் சில மாற்றங்களுடன் நடைபெற வேண்டும் என குறிப்பிட்டார்.

பின்னர் கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.

அதன் பின்னர் மாவட்ட அபிவிருத்தி விடயங்களான விவசாயம் , கமநலம், கல்வி வீதி ,போக்குவரத்து ,நீர்ப்பாசனம் ,அனர்த்தமுகாமைத்துவம், சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரட்ணம் தவநாதன் ஆகியோருடன்து றைசார்ந்த அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: