முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நாளை நகைச்சுவைக் கலைஞர் ஹரித் இஸ்கண்டருடன் தாம் கலந்துகொள்ளவிருந்த தொலைக்காட்சி ரகளை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் காரணம் என்கிறார்.
“அவருடன் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதாக இருந்தது.
“அதுதான் நோக்கம், ஏனென்றால் அவர் ஒரு நகைச்சுவைக் கலைஞர், அரசியல்வாதி அல்லர்.
“திடீரென்று அந்நிகழ்ச்சியை நிறுத்துமாறு உத்தரவு வந்தது. அதுதான் நஜிப்பின் வழி”, என இன்று சுங்கை புசாரில் உரையாற்றியபோது மகாதிர் கூறினார்.
ஹரித் இஸ்கண்டர் ஆஸ்ட்ரோ அவானியில் ‘Obviously Harith Iskander’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சனிக்கிழமைகளில் இரவு மணி 9.30க்கு அது ஒளியேறுகிறது.
நீ பண்ணியதைதான் உன் வழி வந்த இவனும் செய்கிறான். என்ன செய்வது –பாதிக்கப்படுவது மக்கள்தான் ஆனாலும் அம்னோ சப்பிகளும் குஞ்சுகளும் சிரித்து கொண்டே வங்கிகளுக்கு செல்கிரான்கள்
என்ன செய்வது மாமா மகாதீரே !
நீங்கள் விதைத்ததுதானே, நீங்கள் அறுவடை செய்ய முற்படும்போது விதைத்தது முந்தி கொண்டு விட்டது.
சரி கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறீர் . பரவாஇல்லை . தவறை உணர்ந்து மலேசியா மக்கள் யாவரும் பயன் அடையுமாறு பி என் நை துவம்சம் செய்தால் நன்றே.
தமிழர்களே!ஜாக்கிரதை!!மகாதிர்மாமாவை நம்பாதீர்கள் பச்சை இன துரோகி.செய்த பாவத்தை நிவர்த்தி செய்து புண்ணியத்தை தேடிக்கொண்டு தமிழர்களிடம் நிருபியுங்கள்.