மலேசியாவின் ’லேங்காங்’ பள்ளத்தாக்கு குகைகளில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஒரு இனம் மர்மமாக அழிந்தது எப்படி?
அங்கு காணப்படும் குகைகளில், கிடைத்த எலும்புக்கூடுகளில் 5000 ஆண்டுகளுக்கு உரியது, 1700 ஆண்டுகளுக்கு உரியது என பல காலகட்ட படிமங்கள் கிடைத்துள்ளது, மேலும் மர்மத்தை வலுப்படுத்துகிறது. அவர்கள் புதிய கற்காலம், பழைய கற்காலம், வெண்கல காலம் என தொடர்ந்து வாழ்ந்துள்ளனர்.
நாடு, வரலாறு என எதிலும் சம்பந்தப்படாமல் தனியாக ஒரு இனம் இந்த பகுதியில் இவ்வளவு காலம் வாழ்ந்திருப்பது புதிரானது.
அந்த இனம் எப்படி தோன்றியது? எப்படி இங்கு வாழ்ந்தது? அவர்களின் முடிவு எப்படியானது? அவர்களின் உறவுகள் வேறு எங்கும் பரவி இருந்ததா? என எல்லாமே மர்மத்தின் உச்சமாக உள்ளது.
லேங்காங் நகரத்தைச் சுற்றிய காட்டுப்பகுதியில்தான் மடிந்த இந்த மர்ம உலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த லேங்காங் பள்ளத்தாக்கை 2012 ல் உலக பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அறிவித்தது.
தொடங்கியது தொல்லியல் ஆய்வு
தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாவின் பெராக் மாநிலத்தின் வடமேற்கிலுள்ள காட்டுப்பகுதியில் உள்ளது இந்த பள்ளத்தாக்கு, இங்கு பெராக் என்ற ஆறும் பழங்காலந்தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்றின் கரையோரத்தில் பல குகைகளும் இருக்கின்றன.
இந்த பள்ளத்தாக்கில் நுழைவாயில் போல முதல் குகையாக புலி குகை(Gua Harimau) ஒன்று உள்ளது. முதன் முதலாக இந்த குகையையும் அதனுள் வெண்கல கருவிகள், பானைகள், 11 மனித எலும்புக்கூடுகள் வெளித்தெரியும் புதைபடிமமாக கிடந்தது ஏதேச்சையாக பார்க்கப்பட்டது.
அதுவே அங்கு 1980 மற்றும் 90 களில் பெரிய தொல்லியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது. நான்கு முக்கிய பகுதிகளாக பிரித்து தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது.
மதகுருவின் எலும்புக்கூடு
இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு மனித எலும்புக்கூடு 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இன்னொரு மனித எலும்புக்கூட்டை சூழப்பட்டுள்ள பொருள்களை வைத்து அது அந்த இனத்தின் மதகுருவாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு இனத்திற்கான வாழ்விடம்
வெறும் எலும்புக்கூடுகள் மட்டும் கிடைத்திருந்தால் இது இடுகாடாக இருந்திருக்கும் என முடிவுசெய்யலாம்.
ஆனால், புலி குகை பகுதியில் கிடைத்த வெண்கல கருவிகளும், புக்கிட் புனுஹு அருகில் கிடைத்த கைக்கோடாரிகளும் அது ஒரு வாழ்விடம் என சொல்கிறது.
மேலும், 5000 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியர்களிடம் வெங்கல பாரம்பரியம் இருந்ததற்கான நிரூபணம் எனவும் தொல்லியல் ஆய்வு உறுதி செய்கிறது.
அங்கு கிடைத்த பொருள்கள் பயன்பாட்டு காலம் 1700 ஆண்டுகளுக்கு முந்தையது. மேலும், 18,3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் பூமியை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என பூமி பற்றிய ஆய்வுகளில் தெரிய வருகிறது. அது ஆப்பிரிக்காவின் புறப்பகுதியிலும் இந்த லேங்காங் பள்ளத்தாக்கிலும் என்பது குறிப்பிடத்தக்கது.
நதியோர நாகரீகம்
ஆதிகாலத்தில் பெரும்பாலும், நீர்நிலைகள் பக்கத்திலேதான் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அதனால்தான், மனித நாகரிகமே ஆற்றுச் சமவெளி பகுதிகளில் வளர்ந்ததாக வரலாறுகள் சொல்கிறது.
அதுபோல இந்த பள்ளத்தாக்கில் பெராக் ஆறு ஓடுகிறது, அதன் கரை நெடுகிலும் பல குகைகள் பழங்கால மனிதர்கள் பெருமளவில் வாழ்வதற்கு வசதியான அமைப்புகள் காணப்படுகிறது. அதனால், இங்கு ஒரு இனக்கூட்டம் வாழ்ந்திருக்கக்கூடும்.
மர்மமான முடிவுஆனால், அந்த இனம் ஏன் நீடிக்கவில்லை. வாரிசுகளற்றுப் போனார்களா?, இடம் பெயர்ந்தார்களா? அல்லது போர், புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களில் மிச்சமில்லாமல் மடிந்தார்களா? என ஆய்வாளர்களும் யூகித்து வருகின்றனர்.
ஒரு இனத்தின் வரலாறு வெளிச்சத்துக்கு வராமல் வீணாகப் போனது. பூமியில் இதுவரை வாழ்ந்த எல்லா இனத்துக்குமே வரலாறு கிடைத்து விடுவதில்லை என்பது பாடமாகிப் போனது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியிலான எலும்புக் கூடுகள் ஒரே பகுதியில் கிடைப்பது ஆச்சரியமானது. கால நிர்ணய சோதனைகளுக்கான அடிப்படைகளும் சரிதானா? என சிந்திக்கவும் தோன்றுகிறது.
-http://news.lankasri.com