ஜேர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரின் உத்தரவின் பேரில் 1,70,000 யூதர்களை சித்ரவதை முகாமில் அடைத்து கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
70 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்று வந்த நேரத்தில் லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரின் உத்தரவின் பேரி கொல்லப்பட்டனர்.
போலந்து நாட்டில் கட்டப்பட்ட Auschwitz என்ற சித்ரவதை முகாமில் தான் இந்த கொடூர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
ஐரோப்பா முழுவதும் உள்ள சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான யூதர்களை கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த முகாமிற்கு Reinhold Hanning(தற்போதைய வயது 94) என்பவர் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் பணியில் இருந்தபோது, 1,70,000 யூதர்கள் கொல்லப்பட்டனர். இந்த வரலாற்று குற்றத்திற்கு காவல் அதிகாரியும் உடந்தையாக இருந்ததாக 4 மாதங்களுக்கு முன்னர் இவர் மீது விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையின் இறுதி வாதம் நேற்று ஜேர்மனியில் உள்ள Detmold நீதிமன்றத்தில் வந்துள்ளது.
முன்னாள் காவல் அதிகாரி மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
-http://news.lankasri.com