ஈழத் தமிழர்களுக்கு அநீதியிழைத்தால் கச்சத்தீவை மீட்க இந்திய அரசு தயங்காது! பொன்.ராதாகிருஷ்ணன்

pon-rathakrishnanஇலங்கையில் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அநீதியிழைக்கும் பட்சத்தில் கச்சத்தீவினை மீட்க இந்திய அரசாங்கம் தயங்காது என இந்திய மத்திய அமைச்சர் பொன். ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. இதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய், இதற்கு தீர்வு தேடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தகுந்த ஒத்துழைப்பை மாநில அரசு வழங்கியிருந்தால்இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

இது இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். அண்டை நாட்டுடன் உள்ள நட்பு தொடர வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.

இதேவேளை, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இலங்கை அரசின் செயல்பாடு அமைந்தால் கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தயங்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: