ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் நாடும் வெளியேற வேண்டுமா?

france_traces_001ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் நாடு வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு வலது சாரி கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பாக பிரித்தானியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ‘விலக வேண்டும்’ என பெரும்பாலானவர்கள் வாக்களித்ததை தொடர்ந்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியுள்ளது.

பிரித்தானியா மக்களின் தீர்ப்பினை பாராட்டிய பிரான்ஸ் நாட்டு வலது சாரி கட்சி தலைவரான Marine Le Pen என்பவர் தற்போது பிரான்ஸ் குடிமக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.

அதில், பிரித்தானியாவில் நடைபெற்றதை போல் பிரான்ஸ் நாட்டிலும் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்த நமக்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஜனநாயக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் விருப்பத்திற்கு எதிராக குடியமர்வு தொடர்பான விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் செயல்பட்டு வருகிறது.

தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வேலைவாய்ப்பின்மைக்கு இந்த ஒன்றியம் தான் காரணம்.

இதுமட்டுமில்லாமல், அகதிகளை கடத்துவது, தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்க தவறியுள்ளது.எனவே, பயனில்லாத ஒன்று ஒன்றியத்தில் உறுப்பினராக நீடிப்பதா அல்லது விலகுவதா என பிரான்ஸ் நாட்டிலும் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என Marine Le Pen கோரிக்கை விடுத்துள்ளார்.

-http://news.lankasri.com