துருக்கி எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் அந்நாட்டு விமானி உயிரிழந்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யா மற்றும் துருக்கி எல்லையில் பறந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்.
இதில் விமானத்தில் பயணித்த விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ‘துருக்கி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்’ என ரஷ்யா வலியுறுத்தியது.
ஆனால், ரஷ்யாவின் கோரிக்கையை துருக்கி இதுவரை நிராகரித்து வந்துள்ளது. மேலும், இரு நாடுகளின் உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘துருக்கி ஜனாதிபதியான எரோடகன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதில் பலியான ரஷ்ய விமானிக்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
விமானியின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை பகிர்ந்துக்கொள்கிறேன். மேலும், ரஷ்யா நாட்டுடனான உறவை வளர்த்துக்கொள்ள தயாராக உள்ளேன்’ என எரோடகன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-http://news.lankasri.com