தீவிரவாதியை கொன்ற பொலிஸ் ஹீரோ: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியானது

pic01துருக்கியின் Ataturk விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

முதலில் வெளிநாட்டு பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்ட தீவிரவாதிகள் பின்னர் பொதுமக்களுடன் ஒன்றாக கலந்து தாங்களும் தப்பி ஓடுவதை போல நாடகமாடியுள்ளனர், அப்போது தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

இதில் ஒரு தீவிரவாதி பயணிகளை நோக்கி சுடத் தொடங்கினர், அப்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது தீவிரவாதியை சுட்டுக் கொன்றுள்ளார், இவன் வைத்திருந்த வெடிகுண்டு தரையில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன, இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ஐஎஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்ககூடும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தீவிரவாதிகள் கார் மூலம் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர், பாதுகாப்பு சோதனைகளில் இருந்து தப்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் கண்டனம்

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், இந்த தீவிரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.

இந்த கொடூ தாக்குதலை நிகழ்த்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், இது உலக மக்களுக்கு அபாயத்தை உணர்த்த விடப்பட்ட எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

ஜனநாயக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், இது போன்ற தாக்குதல்களால் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்காது. பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய கிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com