”I AM MALALA” என்ற சுயசரிதை புத்தகம் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக கோடீஸ்வரர் ஆகியுள்ளார் மலாலா.
பாகிஸ்தானை சேர்ந்த மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
இதன் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு அவரது தலையில் தலிபான்கள் சுட்டனர், எனினும் லண்டனுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்ததில் மலாலா உயிர் பிழைத்தார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் மலாலா தொடர்ந்தும் பெண் கல்வி குறித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ”I AM MALALA” என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார். இந்த வாழ்க்கை வரலாற்று பதிப்புரிமையைப் பாதுகாப்பதற்கான நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டது.
மலாலாவின் புத்தகங்கள், சொற்பொழிவுகளைப் பயன்படுத்தும் நபர்கள் குறித்த நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதன் மூலம் வருவாய் ஈட்டியுள்ளது.
இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com