டாக்கா உணவு விடுதிக்குள் தீவிரவாத தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு, 35 பேர் படுகாயம்

dhakaவங்கதேசத்தில் பிரபல உணவு விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள பிரபல உணவு விடுதி ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த உணவு விடுதியில் பல்வேறு நாடுகளில் உள்ள அரசுமுறை விருந்தினர்கள் பலர் வந்து தங்குவது வழக்கம்.

தற்போது அங்கு புகுந்திருக்கும் தீவிரவாதிகள் அங்குள்ள விருந்தினர்கள் 20 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 3 பொலிசார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள் என்பதால் வெளிநாட்டவர்கள் அதிகம் அந்த உணவு விடுதியில் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

துப்பாகிச்சத்தம் கேட்டுள்ளதாக தெரிவித்த அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அங்குள்ள சூழல் சற்று மோசமான நிலையில் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே சம்பவம் நடக்கும் பகுதியில் நுழைந்த அதிரடிப்படையினர் தீவிரவாதிகளுடன் நடத்திய தாக்குதலில் 35 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

7 ல் இருந்து 9 பேர் கொண்ட குழு இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிணைக்கதிகளாக பிடித்து வைத்துள்ள வெளிநாட்டவர்களை மீட்கும் பொருட்டு வங்கதேச அரசு அதிகாரிகள் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

-http://news.lankasri.com