ஐரோப்பாவை அடைவதற்காக மத்திய தரைக்கடலை கடக்க முயற்சி செய்த அகதிகளின் படகு கவிழ்ந்ததில் ஆயிரக் கணக்கான அகதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து யூன் வரையான காலப்பகுதிக்குள் 2,899 அகதிகள் பலியாகியுள்ளதாக சர்வதேச புலம் பெயர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால்,கடந்த வருடத்தின் அறிக்கையைவிட இந்த ஆண்டில் 50 சதவீதம் உயிரிழப்பு சம்பவம்ப திவாகியுள்ளதாகவும்,மத்திய தரைக்கடலை முயற்சிக்கும் மக்கள் ஆபத்தையே சந்திக்க நேரிடும் என அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மத்திய தரைக்கடலில் 2014 ஆம் ஆண்டு 743 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், இதே வேளை 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் யூன் வரையில் 1,838 அகதிகள் மாயமாகியும், நீரில் மூழ்கியும் உள்ளார்கள் என கடந்த ஆண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச புலம் பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சம்பவங்களில் 3000 பேர் உயிரிழந்துள்ளார்கள் என சர்வதேச புலம் பெயர் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜொயில் மில்மன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஆயிரக்கணக்கான அகதிகளை காப்பாற்றியமை ஐரோப்பாவிற்கு ஒரு கடினமான வேலையாகவே இருந்தாலும்,3000 பேர் உயிரிழந்தமை பரிதாபகரமானதே என்றும் ஐரோப்பியா அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அவர் கூறியதாவது, லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை, இந்த ஆண்டின் 6 மாதத்தில் மட்டும் 225,665 குடியேறிகள் இத்தாலி கிரீஷ், சிப்ராஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கடல் வழியாக குடியேறிகள் சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று லிபியா படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததில் 10 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கான அகதிகளை இத்தாலியன் கப்பல் மூலம் காப்பாற்றியுள்ளதாகவும் இத்தாலிய கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த அகதிகளின் சடலங்களை அண்மையில் இத்தாலியில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com