கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 10204 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்!

eelam womenவடக்கின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 10204 குடும்பங்கள் இருப்பதாக மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், 41465 குடும்பங்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 4396 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன.

2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்களின் படி ஆறு பிரதேச செயலலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 4396 பேர் இருப்பதாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், முப்பது வயதிற்கு உட்பட்ட இளம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் 193 காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் கூறுகின்றது.

இந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளால் 1617 பேரும், விபத்துக்களால் 93 பேரும், நோய் மற்றும் இயற்கை காரணங்களால் 2301 பேரும், தற்கொலை காரணமாக 54 பேரும், ஏனைய காரணங்களால் 331 பேரும் கணவனை இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.

இதில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1327 குடும்பங்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1244 குடும்பங்களும், ஒட்டுசுட்டான் பிரதே செயலாளர் பிரிவில் 920 குடும்ங்களும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 545 குடும்பங்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 360 குடும்பங்களும். வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 334 குடும்பங்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, 41327 குடும்பங்களை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் 5808 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. இதில், 302 குடும்பங்கள் முப்பது வயதிற்குட்டப்பட்ட இளம்பெண் தலைமைததுவக் குடும்பங்களாகும்.

-http://www.puthinamnews.com

TAGS: