ஜனாதிபதியின் கருத்துக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பின் தினேஸ் குணவர்தன இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற வாளகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.
யுத்தக்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தனது முடிவில் நிலையாகவும், உறுதியாவுகம் இருக்கின்றார். எனினும், ஜனாதிபதியின் கூற்றை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.
இது அமைச்சரவை சட்டம், மற்றும் சம்பிரதாயம் போன்றவற்றை மீறும் செயல் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இந்த செயற்பாடனது பாரிய பிழையான ஒன்றாகும். எனவே, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக்குற்ற விசாரணைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதே நீதிபதிகளை கோரியுள்ளனர். எனினும் ஜனாதிபதி அதற்கு பகிரங்கமாகவே மறுப்பு வெளியிட்டுள்ளார்.
யார் என்ன கூறினாலும் அரசியலமைப்பின் படி எந்தவொரு வெளிநாட்டு நீதிபதியையும் நியமிக்க இடமில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பில் உள்ள விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com