டிஏபி, கட்சித் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்ய அடுத்த சில வாரங்களில் அதன் மத்திய செயல்குழுக் (சிஇசி) கூட்டத்தைக் கூட்டவிருப்பதாக அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
கட்சித் தேர்தல் இவ்வாண்டில் நடந்தால் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமைச் செயலாளர் பதவியைத் துறக்க வேண்டியிருக்கும் என்றாரவர்.
ஆனால், கட்சியில் எந்தப் பதவிக்கும் அவர் போட்டியிடலாம்.
“கட்சி அமைப்பு விதிகளின்படி தலைமைச் செயலாளர் பதவியை மூன்று தவணைகளுக்கு மட்டும்தான் (லிம்) வைத்திருக்க முடியும். ஆனால், அவர் மற்ற பதவிகளை வகிக்க முடியும்”, என லோக் கூறினார்.