அமெரிக்காவில் உள்ள ஒரு சிறையில் சிறைக்காவலர் மாரடைப்பால் அவதிப்படுவதை பார்த்த சிறைக்ககைதிகள் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் கைவிலங்கிடப்பட்ட 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந் தனர். அங்கு பணியில் ஈடுபட்டி ருந்த ஒரே ஒரு காவலர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நிலைகுலைந்துள்ளார்.
இதைப் பார்த்த கைதிகளில் ஒருவர் கதவை உடைத்துள்ளார், அதன்பிறகு வெளியே வந்த 8 கைதிகளும், காவலரை பரிசோதித்தபோது அவருக்கு நாடித் துடிப்பு இல்லாததை உணர்ந்தனர்.
பின்னர் கைதிகள் உதவி கோரி கதவைத் தட்டியவாறு மீண்டும் கூச்சல் போட்டனர். இந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அதிகாரிகள் அங்கு ஓடி வந்து, கைதிகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவசர மருத்துவ சேவைப் பிரிவை அழைத்தனர்.
இதனிடையே, மூச்சடைத்துப் போன பாதுகாவலரின் உயிரைக் காப்பாற்ற முதலுதவி செய்தனர். அதற்குள் விரைந்து வந்த மருத்துவர்கள் அதிர்வுக் கரு வியைக் கொண்டு அவருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து காவலரின் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
தற்போது சிறைக்காவலாளி நலமுடன் உள்ளார், சிறைக் கைதிகள் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து உதவியதால் காவலரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்று கேப்டன் மார்க் அர்னெட் தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com