“நெருப்பு கடலாய் மாற்றுவோம்” அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

north_south_001கறுப்பு பட்டியலில் வடகொரிய அதிபரின் பெயரை அமெரிக்கா சேர்த்துள்ளதால், அந்நாட்டு இராணுவம் பெரும் கோபம் கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, வட கொரியா அணு மற்றும் ஏவுகணை சக்தியை அதிகரிக்கும் வகையில் தீவிர சோதனைகள் நடத்தி வருகிறது.

இதனால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அண்டை நாடான தென் கொரியா, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.

இதையடுத்து தென் கொரியாவில் ‘ THAAD’ எனப்படும், அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை தென் கொரியாவில் நிறுவ அமெரிக்கா முன்வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா, உலகளவில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் THAAD ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை தென் கொரியாவில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

‘ THAAD’ நிறுவப்படும் பகுதி, காலம் ஆகியவை உறுதி செய்யப்பட்டால், கடுமையான தாக்குதல் நடத்தப்படும். எனவே இத்திட்டத்தை அமெரிக்க கைவிடவேண்டும்.

இதனையும் மீறி மேற்கொண்டால், தென் கொரிய பிராந்தியத்தை நெருப்புக் கடலாய் மாற்றுவோம். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்க அமைச்சரவை அவரை கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது.

இச்செயல், போர் பிரகடனம் போன்றது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று வட கொரிய ராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com