அமெரிக்காவில் பொலிசார் 2 கறுப்பின இளைஞர்களை சுட்டுக் கொன்றுள்ளார்கள். தற்போது அமெரிக்காவில் இனவெறி தலைவிரித்து ஆடுகிறது என்கிறார்கள். இன் நிலையில் கறுப்பின மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களையும் சாதாரண மக்கள் போலவே அரசு நடத்தவேண்டும் என்றுகோரி, லண்டனில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். தமிழர்கள் 2009ம் ஆண்டு வீதியை மறித்து போராட்டம் நடத்தியது போல அவர்களும் வீதிகளை மறித்து லண்டனில் உள்ள முக்கியமான தெருக்களை, ஸ்தம்பிக்க வைத்தார்கள்.
மேலும் தொடரூந்து நிலையங்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளார்கள். அமெரிக்காவின் உற்ற நண்பனாக இருக்கும் பிரித்தானிய அரசு. அமெரிக்காவுக்கு இது தொடர்பாக அழுத்தத்தை கொடுக்கவேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இவர்களை அடக்க பொலிசார் பெரும் பாடுபட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் வெள்ளை இனப் பொலிசார் பல தடவை கறுப்பின இளைஞர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவருகிறார்கள்.
இது ஒருவகையான இனவெறியே. சாதாரண ரவுடியைக் கூட இவர்கள், விட்டுவைப்பது இல்லை. உடனே அவர்களை சுட்டு பழிதீர்த்துக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
-http://www.athirvu.com