புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை தொடர்பாக மேலும் பேசவேண்டியுள்ளது என எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முக்கியமாக இரண்டு விடயங்கள் குறித்து பேசப்பட்டன. புதிய அரசியலமைப்பு, அரசியல் சாசன மாற்றம் மற்றும் தேர்தல் முறை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பேராசிரியர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் செல்வகுமாரன் ஆகியோர் இது தொடர்பில் விளக்கமளித்திருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் இவை குறித்து ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். அதில் உள்ள சந்தேகங்கள், நிலமைகள் தொடர்பாக தமது கருத்துக்களை பரிமாற்றி இருந்தனர். இந்தச் சந்திப்பு தொடரும். இது தொடர்பில் நாம் மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவினை எட்ட வேண்டியுள்ளது உள்ளது எனத் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/5e4IeoLgJXI?list=PLXDiYKtPlR7M-Mdn1qMDhtZFsXPOu_2cz