யுத்தக்குற்ற விசாரணைகளில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

usa_indian flagஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம் என மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

எனினும், இலங்கை அரசியல் தலைமைகள் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதில் முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர்.

குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் பதவியிலிருக்கும் வரையிலும் சர்வதே நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை என கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க வெளிவிவகாரா அமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்துக்கள் வேறு விதமாக அமைந்துள்ளதனை நாம் அவதானிக்கலாம்.

இந்நிலையிலேயே, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமை விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரோம் மாலினோவ்ஸ் போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை என இலங்கை கூறிவரும் நிலையில் அமெரிக்காவின் கருத்து தற்போது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க மனித உரிமை விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரோம் மாலினோவ்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம்.

உள்நாட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்தினால் அது நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, குறித்த விசாரணைகளில் சர்வதேச தரத்திலான விசாரணை குழுவை நியமிக்க வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: