1எம்டிபி கணக்காய்வாளர்களான கேபிஎம்ஜி-க்கும் டூலிட்டல் மலேசியாவுக்கும் எதிராக தாம் செய்த புகார்கள்மீதான நடவடிக்கைகள் “ஆமை வேகத்தில்” நகர்கின்றன என்று குற்றஞ்சாட்டிய டிஏபி எம்பி டோனி புவா, அது ஏன் என்று மலேசிய கணக்காளர் கழகத் தலைவர் முகம்மட் பயிஸ் முகம்மட் அஸி விளக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் மலேசியாகினி, மலேசிய கணக்காளர் கழகத்தைத் தொடர்பு கொள்ள முனைந்துள்ளது.
அவ்விரண்டு நிறுவனங்களும் வேண்டுமென்றோ அல்லது கவனக்குறைவாகவோ 1எம்டிபி-இன் கணக்குகளை முறையாக ஆய்வு செய்யத் தவறிவிட்டன என்று புவா ஓர் அறிக்கையில் கூறினார்.
புகாரா? என்ன புகார் புவா?