தலைவரை இழுத்து பேசிய விமல் வீரவன்ச!

vimal

பிரபாகரன் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லையாம்!! விமல் குமுறுகின்றார் சிங்­கள மாண­வர்களை தாக்­கிய சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் யாழ். பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள், தமிழ் அடிப்­ப­டை­வா­தி­கள் மற்றும் இன­வா­தி­க­ளுமே உள்­ளனர்.

விடு­தலைப்புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் காலத்தில் கூட இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சி தெரி­வித்­துள்­ளது.

உத்­தேச அர­சியலமைப்பு திருத்­தமும் சர்­வ­தே­சத்தை திருப்­தி­ப்ப­டுத்தும் செய­லாகும் ­இ­ன­வாதத்­திற்கும் அடிப்­ப­டை­வா­தத்­திற்கும் துணைச் சென்று நாட்டின் எதிர்­கா­லத்தை சீர­ழிக்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் போக்கை உயிரை கொடுத்­தேனும் நிறுத்த வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி குறிப்­பிட்­டுள்­ளது.

ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று திங்கட் கிழமை நடை­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இதன் போது உரை­யாற்­றிய தேசிய சுதந்­திர முன்னணியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச கூறு­கையில்,

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நல்­லாட்சி என்ற கூட்­டாட்சி பத­வி­யேற்று ஒன்­றரை வரு­டங்கள் ஆகின்­றன. ஆனால் தேன்நி­லவு காலத்­தி­லேயே இந்­த­ளவு பிரச்­சினை என்றால் என்ன செய்­வது. நாட்டில் நல்­லி­ணக்கம் என கூறி இருந்த அமை­தி­யையும் நல்­லாட்சி அர­சாங்கம் சீர்­கு­லைத்­துள்­ளது.

யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் சிங்­கள மாண­வர்கள் தாக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் விடு­தி­களில் இருந்த புத்­த­கங்கள் உள்­ளிட்ட உட­மைகள் கூட தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன. புல­னாய்வு அதி­கா­ரி­க­ளுடன் சேர்ந்து சிங்­கள மாண­வர்கள் தமிழ் மாண­வர்­களை தாக்­கி­ய­தா­கவே தற்­போது செய்­திகள் வெளி­யா­கின்­றன.

தமிழ் ஊட­கங்கள் உண்­மைக்கு முர­ணான செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. சிறு தாக்­கு­த­லுக்கும் குரல் கொடுக்கும் சிவில் அமைப்­புகள் இன்று மௌனித்து போயுள்­ளன. பிர­பா­கரன் இருந்த காலத்தில் கூட இவ்­வா­றான சம்­பவங்கள் இடம்­பெ­ற­வில்லை. புலி­க­ளுக்கு உயிர் கொடுக்க முற்­படும் சக்­திகள் நாட்டில் இன்று வீரி­யத்­துடன் செயற்­ப­டு­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்கம் அனைத்­தையும் மூடி மறைத்து வரு­கின்­றது.

சம்மாந்­துறை பகு­தி­யிலும் பொலிஸார் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக தகவல் கிடைத்­துள்­ளது. நாட்டில் என்ன நடக்­கின்­றது என்றே தெரி­ய­வில்லை. இவ்­வாறு நாட்டில் நெருக்­க­டி­யான சூழல் காணப்­ப­டு­கின்ற நிலையில் செயிட் அல் ஹுசை­னுக்கும் ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் திருப்­தி­ய­ளிக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கவும் நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. மேலும் இந்­தி­யா­வுடன் எட்கா ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட்டு நாட்டை பாரிய பொருளாதார பாதாளத்தில் தள்ளிவிட அரசாங்கம் முயற்சிக்கின்றது.

நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களுக்கு விசேட நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்கும் சதி முன்னெடுக்கப்படுகின்றது. இவற்றை தோல்வியடைய செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

-http://www.athirvu.com

TAGS: