மலேசிய உதவிப்பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

Hamidi-laughableஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மலேசிய உதவி பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi (டட்டுக் சேரி கலாநிதி அஹமட் ஹமிடி) நாளை இலங்கை வரவுள்ளார்.

இதன்போது அவர் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளார். இரு நாட்டு நல்லுறவின் ஒருக்கட்டமாக அவரின் விஜயம் அமையவுள்ளதாக மலேசியஉயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

நாளை அதிகாலை 12.30க்கு இலங்கை வரும் மலேசிய உதவி பிரதமர், இலங்கையின் உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன் பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்துறை அமைச்சர் தலதா அத்துகோரள அவர்களையும் சந்திக்கவுள்ளார்.

நாளைய தினமே ஜனாதிபதியை சந்திக்கும் அவர் நாளை மறுநாள் வெள்ளி கிழமையன்று பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

மலேசியாவில் 1500 வரையிலான இலங்கை மாணவர்கள் கல்விகற்கின்றனர். எனினும்இலங்கையில் மலேசிய மாணவர்கள் எவரும் இல்லை.

இந்தநிலையில் வருடத்துக்கு 51ஆயிரம் இலங்கையர்கள் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: