ஐ.நா. எச்சரிக்கை மனிதாபிமான பேரழிவை சந்தித்து வரும் அலெப்போ நகரம்

aleppoபோருக்கு தயார் நிலையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரின் கிழக்குப் பகுதிக்கு செல்ல மற்றும் வெளியேற இருந்த ஒரே முக்கிய நெடுஞ்சாலையை அரசு படையினர் சமீபத்தில் துண்டித்தனர்.

பெரும் நிவாரண முயற்சிகள் தற்போது தேவை என ஐ.நாவின் மூத்த அதிகாரி ஜான் எகிலாந்து தெரிவித்துள்ளார். வ்வொரு வாரமும், 48 மணி நேர போர் இடை நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்நேரத்தில் நகருக்குள் உதவிகள் சென்றுவர முடியும். ண்டுவீச்சுகளாலும், ஷெல் குண்டு தாக்குதலினாலும் தினம் தினம் பொதுமக்கள் மடிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

-http://www.athirvu.com