ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியதில் 19 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் குறிப்பிட்ட மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 20 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கைதான நபர் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் அந்த ஊனமுற்றவருக்கான மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் எனவும், வெளியே இருந்து வந்து இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலின் இடையே அந்த நபர் தாம் சாதித்துவிட்டதாக குரல் எழுப்பியதாக நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த குறிப்பிட்ட பகுதியானது அமெரிக்க ராணுவ தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com