சிரியாவின் அலப்போ நகரின் கிழக்கு பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதிக்கான தடங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன என அறிவித்த சிரியா ராணுவம் அங்கு இருக்கும் போராளிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரியுள்ளது.
தங்களது ஆயுதங்களை கையளிப்போர் பாதுகாப்பாக நகரை விட்டு வெளியேறலாம் அல்லது நகரிலேயே தங்கியிருக்கலாம் என்று ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப வாரங்களில் அலெப்போவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரே பொருள் விநியோகத் தடத்தையும் அரசு ஆதரவுப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு நகரின் முற்றுகையை நிறைவு செய்தன.
எனினும் போராளிகள் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருவதால் உதவி முகமைகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளனர். -BBC