நல்லிணக்கத்தை பேச்சளவில் வைத்திருக்காதீர்கள்! அடிப்படைப் பிரச்சினைகளை ஆராயுங்கள்

maithiri_ranil_001இலங்கையில் போர் எதற்காக உண்டானது. போருக்கான அடிப்படை காரணிகள் என்ன? என்பதை கண்டறிந்து அந்த காரணிகளை இல்லாமல் செய்வதன் ஊடாகவே இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உண்டாகும். என நல்லிணக்க செயன்முறைக்கான மக்கள் கருத்தறியும் குழுவினரிடம் பொதுமக்கள் கருத்து கூறியிருக்கின்றனர்.

நல்லிணக்க செயன்முறைக்கான குழு இன்றைய தினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே மேற்படி விடயம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து க்களை கூறியிருக்கின்றனர்.

இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்கள் தமது உரிமையை வென்றெடுப்பதற்காக கடந்த காலங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்து இறுதியில் ஆயுதப் போராட்டத்தின் இறுதி தருணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், சர்வதேச விசாரணை ஒரு பக்கம் மறுபக்கம் நல்லிணக்க பொறிமுறை சார்ந்த விடயங்கள். ஆகவே நல்லிணக்கத்தின் ஒரு பகுதியாகவே போர் குற்றம் காணப்படுகிறது. போர்குற்றமானது திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது.

ஆகவே இறுதிக்கட்டத்தில் மக்கள் மீது கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களை கொல்லவேண்டும் என்ற எண்ணம் ஆளமாக அங்கு காணப்பட்டடிருக்கிறது.

அது என்ன என்பதை அறிந்து அதனை அழிக்காமல் நல்லிணக்கம் என்பது பேச்சளவிலேயே இருக்கும். நடைமுறை என்பது இருக்காது.

அடிப்படையில் தெளிவும் தீர்வும் இல்லாமல் நல்லிணக்கம் ஏற்படாது என நல்லிணக்க செயலணியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: