6 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட ஆப்கான் முதியவர்

afghan-childஆப்கானிஸ்தானில் முதியவர் ஒருவர் 6 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கடவுள் அளித்துள்ள வரம் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானில் மத போதகராக இருப்பவர் முகம்மது கரீம். 60 வயதான இவர் ஹேராத் மாகாணத்தில் இருந்து 6 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதாக கூறி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் தமக்கு கடவுள் பெயரால் குறிப்பிட்ட சிறுமியை தானமாக அளித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் பெற்றோரின் சம்மதம் இன்றி சிறுமியை குறிப்பிட்ட மத போதகர் கடத்தி சென்றுள்ளதாகவும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் பொலிசாரிடம் மனு அளித்துள்ளனர்.

மகளிர் நல வாரிய தலைவர் இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமி வேறெதுவும் பேச மறுப்பதாகவும் ஆனால் இந்த மனிதரால் தாம் மிகவும் அஞ்சுவதாகவும் திரும்ப திரும்ப அந்த சிறுமி கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் நாட்டினை பொறுத்தமட்டில் அரசு வரையறுக்கப்பட்ட பெண்களுக்கான திருமண வயது 16 எனவும் ஆண்களுக்கு 18 எனவும் முடிவு செய்துள்ளது. இருப்பினும் கிராம பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்ற குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாகவே உள்ளது.

ஆப்கான் பொது சுகாதார அமைச்சகத்தின் கணக்குகள்படி 25-49 வயது வரையான ஆப்கான் பெண்களில் 53 சதவிகிதத்தினர் தங்களது 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டவர்களே என தெரிவிக்கின்றது.

-http://news.lankasri.com