சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே மனித இனம் கஞ்சாவினைபயன்படுத்தியுள்ளதாக ஜேர்மனி நாட்டின் விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதே காலப்பகுதியில் தான் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கஞ்சாபயன்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, ஐரோப்பவின் பனிஉறைவு உருக ஆரம்பித்ததும் இதேகாலப்பகுதியில் என்றும் விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிவந்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அப்போது வாழ்ந்த மக்கள் தமது சுயதேவைக்காக கஞ்சாவினை வளர்த்துவந்துள்ளமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கஞ்சா செடி மூலம் சத்துள்ள ஆகாரம் மற்றும் ஆடைகள்நிர்மாணிப்பிலும் முன்னோர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 3000 வரடங்களுக்கு முதல் அல்ககோல் அறிமுகத்திற்கு முதல்முன்னோர் கஞ்சாவிற்கே அடிமையாகியிருந்ததாகவும் ஜேர்மன் விஞ்ஞானிகளின்ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com