இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் 12வது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளிட்ட கபீர் ஹாசீமிடம், இந்திய பிரதிநிதி ஒருவர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் அடிப்படையில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு பாலத்தை அமைப்பதன் மேலும் வர்த்தகத்துறையை மேலும் மேம்படுத்த முடியும். அதனடிப்படையில் இரு நாடுகளுக்கிடையிலும் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியப்பாடு அதிகமுள்ளது. பாலத்தை அமைப்பதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
-http://www.puthinamnews.com