தமிழீழம் நாடாகவில்லை- ஆனால் 3 நாடுகளோடு சரிக்கு சமனாக மோதும் “தமிழீழ உதைபந்தாட்ட கழகம்”

tamil eelam football-SMALL

தமிழ் ஈழம் மலரவேண்டும். அங்கே தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழவேண்டும் என்று, பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமது உயிரை தியாகம் செய்தார்கள். 33 வருடங்களாக நடந்த போராட்டத்தால் இன்னும் தமிழீழம் மலரவில்லை. ஆனால் போராட்டங்கள் ஓயவும் இல்லை. என்றோ ஒரு நாள் அதனை பெற்றுவிடுவோம் என்று தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் பிறந்த 2ம் தலை முறை மற்றும் 3ம் தலை முறை சிறுவர்கள் கூட தமிழீழத்தை மறக்கவில்லை. பிரித்தானியாவில் இம்மாதம் 25முதல் 29ம் திகதிவரை நடைபெறவுள்ள (WORLD UNITY CUP ) விளையாட்டுப் போட்டிகளில், தமிழீழ உதைபந்தாட்ட அணி சர்வதேச அணிகளோடு மோத இருக்கிறது.

4 நாடுகள் பங்கேற்க்கும் இந்த விளையாட்டில், தமிழீழம் என்ற தேசத்தை ஒரு நாடாக அங்கிகரித்து விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ உதைபந்தாட்ட அணி,  நாம் தமிழீழம் என்ற தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட இருக்கிறோம் என்று பெருமையோடு கூறிவருகிறார்கள். பின் வரும் 3 நாடுகளின் தேசிய விளையாட்டு கழகங்களோடு தமீழீழ அணி மோதவுள்ளது.

Darfur United

Ellan Vanin

Chagos Island

Tamil Eelam

லண்டன் வாழ் அனைத்து ஈழத் தமிழர்களும் இதற்கு தமது ஆதரவினை நல்கவேண்டும். விளையாட்டு நடைபெறும் இடத்திற்குச் சென்று, தமிழீழ அணிக்கு உற்சாகத்தை கொடுக்கவேண்டும். அவர்கள் வென்று வெற்றிவாகை சூட அதிர்வு இணையமும் வாழ்த்தி நிற்கிறது.

இந்த இடத்தில் அரசியலைப் பாராது, போராடும் அனைவரும்- தமிழ் உணவாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் செல்லவேண்டும். அதுவே நாம் எமது நாட்டிற்கு கொடுக்கும் சிறந்த மரியாதையாக இருக்கும். அத்தோடு உங்கள் பிள்ளைகள் உதைபந்தாட்டத்தில் சிறந்தவர்களாக இருப்பின், அவர்களையும் தமிழீழ அணியில் இணைக்க தவறவேண்டாம்.

நடைபெறும் இடம் – சட்டன்(சரே)

Tournament Location:
Sutton United FC
The Borough Sports Ground
Gander Green Ln
Sutton
SM1 2EY

-http://www.athirvu.com

TAGS: