‘மாநில அரசைக் குறைகூறும் கசாலி தயிப் ஆட்சிக்குழுவிலிருந்து விலக வேண்டும்’

wanஅஜில்    சட்டமன்ற   உறுப்பினர்   கசாலி    தயிப்   மாநில   ஆட்சிக்குழுவிலிருந்து   விலகிக்கொள்வது    நல்லது   என்று   அம்னோ  திரெங்கானு    தகவல்   தொடர்புப்  பிரிவுத்   தலைவர்    வான்   அப்துல்   ஹகிம்  வான்  மொக்தார்    அறிவுறுத்தியுள்ளார்.

அது  ஒரு  கடுமையான   நடவடிக்கைதான்  என்றாலும்  திரெங்கானு   மாநில   அரசு   மந்திரி  புசார்   அஹ்மட்  ரசிப்    அப்துல்  ரஹ்மான்  தலைமையில்   சீராக   செயல்பட    அது   அவசியம்    என   வான்    அப்துல்   ஹகிம்  கூறினார்.

“கசாலி  மாநில  அரசின்  கவுன்சிலர்,  கொள்கைகளை  வகுத்து   செயல்படும்   முக்கிய   குழுவில்  இருப்பவர்.     அரசில்   இருந்துகொண்டு   அவரே    அஹமட்  ரசிப்பின்   தலைமை     செயல்படாதிருக்கிறது    எனக்  குறை   கூறுவது   ஏன்?

“அது   அவரும்   செயல்படவில்லை  என்றுதானே  பொருள்.  செயல்படவில்லை   என்று   பொதுப்படையாகக்  கூறக்  கூடாது,   அது  குழப்பம்   தருகிறது.  எது   செயல்படவில்லை  என்பதை   அவர்   தெளிவாக  விளக்க  வேண்டும்”,  என்று    வான்   அப்துல்  ஹகிம்   கூறினார்.