ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினர் பிரச்சினைகள் தொடர்பான விசேட அறிக்கையிடும் அதிகாரி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ரிட்டா இஸாக் டியாயி (Rita Izsák Ndiaye) என்ற இந்த அதிகாரி ஒக்டோபர் 10ஆம் திகதி முதல், 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம், முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, விசேட அறிக்கையாளரின் ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com