விடுதலைப்புலி உறுப்பினர் என தெரிவித்தால் மட்டுமே சடலம் கையளிக்கப்படும்! இராணுவம் விதித்த நிபந்தனை

army_006வவுனியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவரின் சடலத்தினை கையளிப்பதற்கு இராணுவத்தினர் நிபந்தனை விதித்ததாக பெண் ஒருவர் கூறியுள்ளார்.

தனது கணவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புப்பட்டவர் என தெரிவிக்க வேண்டும் என இராணுவத்தினர் நிபந்தனை விதித்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பெண்ணொருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

2014ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து எனது கணவர் சுட்டு கொல்லப்பட்டார். மறவங்குளம் செல்லும் போது புதுக்குளம் பகுதியில் வைத்தது எனது கணவர் கொலை செய்யப்பட்டார்.

இராணுவத்தினர் எனது கணவரை சுட்டுக்கொன்றதை கண்ணால் கண்டவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட எனது கணவரின் சடலத்தினை பெற்றுக்கொள்வதற்கு இராணுவத்தினர் நிபந்தனை விதித்தனர்.

விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மட்டுமே சடலத்தினை கையளிக்க முடியும் என இராணுவத்தினர் தெரிவித்தனர். கணவரின் இறுதி கிரியைகளை கூட முறையாக செய்ய முடியாது போனது.

இதேவேளை, கிளிநொச்சியில் வசிக்கும் எனது குடும்பம் பல்வேறு நெருக்கடியின் மத்தியில் வாழ்ந்து வருகின்றது. எனவே, எனது கணவரின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: