சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது நேபாளத்தில் நடந்த 5 லட்சம் எருமைகள் பலியிடப்பட்ட திருவிழா.
போர்க்களங்களில் மனிதர்களை கொன்றுகுவித்த காலத்தில் இது பெரிதுபடுத்தப்படாமல் இருந்திருக்கலாம். நவீன காலச்சூழல் வேறு. .
கொல்லப்படுவனவற்றில் 70 சதவீதம் விலங்குகள் இந்தியாவிலிருந்து கடத்தப்படுவன, மீதி நேபாளத்துக்கு உரியன. நேபாளத்துக்கு அருகாமையான இந்தியாவின் நான்கு எல்லை மாநிலங்களில் இருந்து கொண்டுசெல்லப்படுகிறது.
இதனால், அங்குள்ள நீதிமன்றங்கள் விலங்குகளின் இத்தகைய கடத்தலுக்கு தடை விதித்துள்ளது. சர்வதேச மனித சமூக அமைப்பின் முயற்சியால், அங்கு கொண்டுசெல்ல இருந்த 2,500 எருமைகள் மீட்கப்பட்டன. 100 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்
அறக்கட்டளை தலைவர்கள் கருத்து:
காதிமை கோயிலின் அறக்கட்டளை தலைவர் ராம் சந்திரா ஷா கூறுகையில், ‘இனிமேல், இந்த கோயிலில் விலங்குகள் தியாகம் என்ற பெயரில் உயிர்ப்பலிகள் மற்றும் வன்முறைகள் நடக்காது. மாறாக, அமைதியின் அடையாளமான வழிபாடுகள் மட்டுமே காணப்படும். பக்தர்கள் கொண்டுவரும் விலங்குகள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்’. என்று கூறுவதோடு கையெழுத்திட்ட ஆணையையும் அனுப்பியுள்ளார்..
’இந்த சடங்கு, கோயிலின் நிதிநிலை சார்ந்த விஷயமாக இருப்பதால் யோசிக்க வேண்டியிருக்கிறது. விழா தொடரலாம். வேண்டுமானால், விலங்குகள் படுகொலை செய்யப்படுவதை அந்த அரங்கில் அடையாளமாக குறைத்து, அமைதியின் நினைவுச்சின்னமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அடுத்த திருவிழா வரும் 2019 ல் நடக்க உள்ளது. பக்தர்கள் அப்போதும் கொண்டுவரவே செய்வார்கள்.’ என ஜய சர்மா கூறியுள்ளார்.
முன்னேற்றமே மாற்றம்தான்:
சிவப்பு ரத்தம் இல்லாத சிறு உயிர்களை கொள்வதை நாம் ஒரு தவறு போல உணர்வதில்லை. உணவுக்காக மீன்களை அறுப்பதும் நீர்வாழ் உயிரி என்பதால் பெரிய தாக்கத்தை தருவதில்லை. கோழி, ஆடு போன்றவற்றை சாப்பிடுபவர்கள் கூட அதை அறுப்பதை பார்க்க அவ்வளவாக விரும்புவதில்லை.
ஆனால், மனிதனைவிட பெரிய விலங்கான மாடு, எருமைகளை ரத்தம் பீறிட தலையை வெட்டிச் சாய்த்தால் காணச் சகிக்குமா? அதுவும் கோயில் விழாக்களை மையப்படுத்தி செய்வது, சார்ந்தவர்கள் மதத்தையும் பிற்போக்காக ஆக்கிவிடுகிறது..
காலமாற்றத்துக்கு ஏற்ப வளைந்து கொடுக்காத பழமை, மக்களின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தும்.
சில வழக்கங்கள் வந்ததே தவறாக இருக்கும்போது, அதை வழக்கம் என்று காரணம் காட்டி மேலும், தொடர விடலாமா?
கருத்து இறுக்கமான முன்முடிவுகளில் வாழ்பவர்களுக்கு, தங்கள் வழக்கங்களின் தவறுகள் புலப்படாமல் இருக்கலாம். ஆனால், சர்வதேசம் என்ற விசாலமான விவாதங்களுக்கு உட்படும்போது, நம் வழக்கங்களில் அறிவுக்கு பொருந்தாத தவறுகள் சூழ்ந்திருப்பது சுட்டிக்காட்டப்படும், அதை பேதமையான வாதங்களால் பிடிவாதம் செய்யாமல் மாற்றிக்கொள்வது மாற்றுபவர்களைவிட மாற்றிகொள்பவர்களுக்கே நலம்.
– மரு
-http://news.lankasri.com
இந்த மூட நம்பிக்கை விளைவுதான் ஏப்ரல் 25, 2015, 8,000 மக்கள்
நேபால் பூகம்பத்திற்கு பலியானார்கல்.
மடத்தனத்திலும் மடத்தனம்- கூறு கெட்ட மூட மடையர்கள்– எவ்வளவு ஏசினாலும் போதாது. பலிகொடுத்து நல்லது கிடைக்குமா? பகுத்தறிவில்லா ஈன பிண்டங்கள்.