முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வடமாகாண சபை நடவடிக்கை

ltte formerவட மாகாண சபை ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு முன்னாள் போராளிகளிடம் வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார்.

புனர்வாழ்வின் போது தடுப்பு முகாமில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் ஆராய்ந்து வட மாகாண சபை நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இது தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படுவது அவசியமாகும் எனவும் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

புனர்வாழ்வின் போது தடுப்பு முகாம்களில் வைத்து சந்தேகத்துக்குரிய ஊசி மருந்துகள் தமக்கு ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளிகளே நல்லிணக்க செயலணி முன்பு நேரடியாகச் சாட்சியமளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. முன்னாள் போராளிகள் பாதிக்கப்பட்டிந்தால் அவர்களை மீட்டெடுக்க மருத்துவ பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டியதும் அவசியம் எனவும் அவர் கூறினார்.

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதற்காக அவர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போராளிகளுக்கான பரிசோதனைகளை எமது மருத்துவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையேற்படின் சர்வதேச வைத்திய நிபுணர்களின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் சிவஞானம் மேலும் குறிப்பிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: