1எம்டிபி பணம் தொடர்பில் முன்னாள் அபு டாபி அதிகாரியிடம் சுவீஸ் விசாரணை

1mdb1எம்டிபி  பணத்தைக்   களாவாடும்    அனைத்துல   சதித்   திட்டத்தில்   தொடர்புகொண்டிருந்ததாக   நம்பப்படும்    அபு  டாபியின்  முன்னாள்   நிதி    அதிகாரி   ஒருவரை   சுவீட்சர்லாந்து    அதிகாரிகள்  விசாரித்து   வருகின்றனர்.

அனைத்துலக   பெட்ரோலிய  முதலீட்டு   நிறுவன(ஐபிஐசி)த்தின்    தலைவர்   காடெம்   அல்-குபாய்ஷி   மோசடி,  பணச் சலவை,  ஊழல்  போன்ற  குற்றங்களைச்   புரிந்திருப்பதாக    ஐயுறப்படுகிறது   என   பைனான்சியல்   டைம்ஸ்    அறிவித்தது.

அதற்குக்  கிடைத்த   கடிதம்   ஒன்றிலிருந்து   இது    தெரிய  வருவதாக  அந்நாளேடு   கூறியது.

சுவீஸ்    அதிகாரிகள்   காடெமின்   கீழ்   அதிகாரி   ஒருவரையும்    1எம்டிபி   அதிகாரிகள்  இருவரையும்கூட   விசாரணைக்காக   தேடிக்   கொண்டிருப்பதாக   டைம்ஸ்   மேலும்   கூறியது.