சிரியாவில் உள்ள Manbij நகரை கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆட்டத்தை சிரியா ஜனநாயகப்படையினர் அடக்கியுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவின் Aleppo மாகாணத்தில் உள்ள Manbij நகர் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 ஆம் திகதி அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து சிரியா ஜனநாயகப்படை மற்றும் குர்திஷ் படையினர், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், அரசாங்க தரப்பில் 300 வீரர்களும், தீவிரவாதிகள் தரப்பில் 1,000 ஜிகாதிகளும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நகரில் பிணையக்கைதிகளாக சிக்கியிருந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 2 வருடங்களில் மட்டும், இந்நகரில் 437 குடிமக்கள் மற்றும் 100 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தங்களிடம் பிணையக்கைதிகளாக சிக்கியுள்ள மக்களை தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், கடுமையான சட்டங்களை விதித்து அம்மக்களை சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். பெண்கள் நாள் முழுவதும் பர்தா அணிந்திருக்க வேண்டும், ஆண்களும் தலைமுடி மற்றும் தாடியை கூட வெட்ட முடியாமல் திணறியுள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளில் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இவர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தங்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.
மேலும் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த பர்தாவினை கழற்றி எரிப்பதும், ஆண்கள் தாடியினை வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுமான புகைப்படத்தினை சிரியா ஊடகம் வெளியிட்டுள்ளது.
-http://news.lankasri.com