முன்னாள் அரசு ஊழியர்களும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளுடனும் நாட்டின் அறிவுஜீவிகளுடனும் சேர்ந்துகொண்டு 1எம்டிபி விவகாரத்தை எதிர்க்க வேண்டும் என அமனா வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் அரசு ஊழியர்கள் என்பதில் பணிஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்கள், முன்னாள் போலீஸ் படைத் தலைவர்கள், முன்னாள் சட்டத்துறைத் தலைவர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர்கள் போன்றோரும் நேர்மையாக சேவையாற்றியுள்ள மற்ற உயர் அதிகாரிகளும் அடங்குவர் என அமனா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார்.
இந்த முன்னாள் அதிகாரிகளுக்கு சமுதாயத்தில் நிறைய செல்வாக்கு உண்டு என்று கூறிய சலாஹுடின் அதைக் கொண்டு “மெர்டேகாவுக்குப் பிந்திய மிகப் பெரிய ஊழல் விவகாரத்துக்கு”த் தீர்வு காண வேண்டும் என்றார்.