போக்கோ ஹராம் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக, நைஜீரிய ராணுவ அதிகாரிகளால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நைஜீரிய பத்திரிக்கையாளர் போக்கோ ஹராம் அமைப்பிற்கு தான் ஆதரவு அளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
துபாயைச் சேர்ந்த பத்திரிக்கையாளார் அகமத் சல்கிடா, ராணுவத்தினரின் விசாரணைக்காக தான் நைஜீரியா செல்ல தயாராக இருப்பாதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன், போக்கோ ஹரம் அமைப்பால் வட பகுதி நகரான சிபோக்கில் கடத்தப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பள்ளிச் சிறுமிகளின் வீடியோ தொடர்பை சமூக ஊடகத்தில் பகிர்ந்த்ததையடுத்து ராணுவம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டது.
இந்த பத்திரிக்கையாளர், கடத்தப்பட்ட சிறுமிகளை எங்கே வைத்துள்ளனர் என்ற தகவலை அறிந்திருப்பார் என தாங்கள் நம்புவதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் அகமத் சல்கிடா போக்கோ ஹரம் அமைப்பின் தலைவர்களை பேட்டிக் கண்டுள்ளார் மற்றும் முன்னாள் அதிபர் குட்லக் ஜோனத்தனின் அரசு நட்த்தி தோல்வியில் முடிந்த சமரச முயற்சியில் பங்கேடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC