900,000 டன் டீசல் எண்ணெயை ஏற்றிச் சென்ற எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்று இந்தோனேசிய கடல் பகுதிக்குள் கடத்தப்பட்டதாக மலேசிய கடலாண்மைத் துறை(எம்எம்இஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்கப்பல், வியர் ஹார்மோனி, இந்தோனேசியாவின் பத்தாமுக்கு அப்பால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எம்எம்இஏ ஓர் அறிக்கையில் கூறியது.
கடத்தியவர்களின் அடையாளத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியாமலிருக்கிறது என்று எம்எம்இஏ கூறிற்று. திங்கள்கிழமை மலேசியாவின் தஞ்சோங் பெலாபாஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அக்கப்பல் ரிம 1.57 மில்லியன் பெறுமதியுள்ள டீசலை ஏற்றிச் செல்கிறது.