பார்டி பிரிபூமி பெர்சத்து(பெர்சத்து) மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார் அதன் இடைக்காலச் செயல்குழு உறுப்பினர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான்.
அறிமுகம் இல்லாதவர்கள்கூட தம்மை அணுகி உறுப்பினராவதற்கு மனுப் பாரங்களைக் கேட்கிறார்களாம். அக்கட்சியைப் பதிவு செய்வதற்கு சங்கப் பதிவகத்தில் (ஆர்ஓஎஸ்) ஆவணங்களைத் தாக்கல் செய்த நாளான ஆகஸ்ட் 9-இல்கூட அப்படி நடந்தது என்றார்.
“புத்ரா ஜெயாவில் கட்சியைப் பதிவு செய்தவுடனேயே அவ்வாறு நடந்தது”.
ஆனால், ஆர்ஓஎஸ் ஒப்புதல் கிடைக்கும்வரை அக்கட்சியால் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ள இயலாது.
“சற்று நேரத்துக்கு முன்னர் பங்சார் வில்லேஜில் (பொருள் விற்பனை மையம்) இருந்தபோது அதேதான் நிகழ்ந்தது. நான் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றபோதும் அதேதான் நடந்தது”, என நேற்றிரவு ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட பின்னர் சாடிக் மலேசியாகினியிடம் கூறினார்.
முகம் தெரியாதவர்கள்கூட உறுப்பினர் பாரம் கேட்கிறார்கள் என்பது இருக்கட்டும் தேர்தலில் ஒட்டு போட வரும்போது மறக்காமல் முகத்தோடு வந்தால் சரி