ஹிம்புனான் மேரா( சிவப்புச் சட்டைப் பேரணி) ஏற்பாட்டாளர் ஜமால் முகம்மட் யூனுஸ் பேரணி நடத்துவதை விடுத்து நாட்டுக்கு நன்மையளிக்கும் ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்யலாம் என மசீச தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான் வலியுறுத்தினார்.
“என்னைக் கேட்டால் மலேசியாவுக்குத் தேவை அமைதியும் நிலைத்தன்மையும்தான். அவர் பேரணி நடத்தும் நோக்கத்தை நான் அறியேன்.
“பேரணி நடத்துவது முக்கியம் என்று எனக்குப் படவில்லை. அது நாட்டின் வளப்பத்துக்கோ நிலைப்பாட்டுக்கோ எந்த வகையிலும் உதவப் போவதில்லை, பின் எதற்காக அதை நடத்த வேண்டும்?, என்று ஒங் வினவினார்.
ஹிம்புனான் மேரா பேரணியை நடத்த தூண்டுவதே அம்னோ தலைவர்தான் என்பதை அறிந்தும் அறியாததைப்போல் ஒங் கா சுவான் அருமையான அரசியல் நடத்துகிறார்.
சரி அவர்கள் எதுவும் செய்ய வேண்டாம்,நீங்கள் நியாயத்தை கேளுங்களேன்.
இந்த சீனிவாசனுக்கு அம்னோவை தூக்கினால்தான் எலும்பு துண்டு கிடைக்கும். அதுதான் இப்படி.இப்போது தெரிகிறதா ஏன் குடுமி ஆடுகிறது என்று?
ஆக்கப்பூர்வமாக என்ன செய்யலாம் என்பதை நீங்களே சொல்லிவிடுங்கள்! இல்லாவிட்டால் உங்கள் வீட்டு முன் வாலை ஆட்டுவார்கள்!