1எம்டிபி தொடர்பாக அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்குகளில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்போருக்கு எதிராகக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் உறுதி அளித்துள்ளார்.
ஆனால், 1எம்டிபி- இலிருந்து பணம் கையாடப்பட்டது முதலில் நிரூபிக்கப்பட வேண்டும் என்றாரவர்.
“1எம்டிபி-இலிருந்துதான் பணம் கையாடப்பட்டது என்பது நிறுவப்பட்டால் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் தனிப்பட்டவர்கள்மீதும் 1எம்டியை மோசம் செய்வதற்கு உடந்தையாக இருந்தவர்கள்மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்”, என்று பால் லவ் சூளுரைத்தார்.
“நம்மிடம் களவாடப்பட்ட பணம் முழுமையாக திரும்பக் கிடைக்க வேண்டும். களவாடியவர்கள் நம் நாட்டுச் சட்டப்படியும் பணம் சலவை செய்யப்பட்ட நாட்டின் சட்டப்படியும் தண்டிக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
இருக்கு ஆனால் இல்லை.
எல்லாம் கண் துடைப்பு –இவன்களுக்கா தெரியாது? எல்லாம் பித்தலாட்டம்.
டிஓஜே வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தவறு செய்தது நிரூபிக்கும்வரை அவர்களை களவாணிகள் என்று குறிப்பிடலாமா அப்படி ஒருவேளை தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் ஆப்பிரிக்கா காட்டிலாவது அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பீர்களா
ஆமா எங்கய்யா நம்ம PON RANGAN ன்னை காணலாம்……………