தேசிய பூப்பந்து இணைகளுக்கு ரோஸ்மாவின் பாராட்டும் ஊக்குவிப்பும்

rosmahபிரதமரின்  துணைவியார்     ரோஸ்மா    மன்சூர்,    ஒலிம்பிக்   பூப்பந்து   இறுதி  ஆட்டத்துக்குச்  செல்லும்   கோ  வீ  செம்- டான்   வீ  கியோங்  இணையைப்  பாராட்டி    கடிதம்   எழுதியுள்ளார்.

மலேசிய   பூப்பந்து    சங்கப்   புரவலரான   ரோஸ்மா,   தாமும்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்   மற்றும்  குடும்பத்தினரும்   இறுதி  ஆட்டம்  வரை  சென்றுள்ள   அவ்விருவரையும்  பாராட்டுவதாகக்  கடிதத்தில்   கூறினார்.

அவ்விருவரும்   இன்று  ரியோ  டி  ஜெனீரோவில்  சீனாவின்   பு  ஹை வெங்-   ஜாங்  நா  இணையுடன்   மோதுகின்றனர்.

இதே  போன்ற  பாராட்டுக்    கடிதமொன்றை   பூப்பந்து   கலப்பு   இரட்டையர்    ஆட்டத்தில்   வெள்ளிப்  பதக்கம்   வென்ற  தேசிய  கலப்பு   இணையான   சான்  பெங்    சூனுக்கும்   கோ  லியு   இங்குக்கும்  ரோஸ்மா  அனுப்பி  வைத்தார்.