ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் உயிருடன் தீயிட்டு எரிக்கப்பட்ட 12 வயது மகள் இறக்கும் நேரத்தில் தனது தாயாரிடம் ‘அவர்களை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமாக பேசியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக், சிரியா உள்ளிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு கடுமையான வரிகளை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு விதித்து வருகிறது.
இந்த வரியை உரிய நேரத்தில் செலுத்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஈராக்கில் உள்ள மொசூல் நகரில் 12 வயது மகளுடன் கிறித்துவ மதத்தை சேர்ந்த பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் தந்தை வெளியே சென்றுருந்த நேரத்தில் வரி வசூல் செய்ய ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டிலிருந்த தாய், ‘என் மகள் குளித்துக் கொண்டு இருக்கிறாள். பணம் அவளிடம் தான் உள்ளது. சில வினாடிகள் காத்திருங்கள். அவள் வெளியே வந்ததும் வரி செலுத்துகிறேன்’ என தாயார் பதிலளித்துள்ளார்.
ஆனால், தங்களை காத்திருக்க சொன்னதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாய் மற்றும் மகளை வீட்டிற்கு பூட்டி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
வீட்டிற்குள் சிக்கிய தாய் மற்றும் மகள் கடுமையான போராடி வெளியே தப்பியுள்ளனர். ஆனால், 12 மகளுக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவரை தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் மகள் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
படுக்கையில் இருந்தவாறு தாயாரை பார்த்த மகள் ‘அம்மா, எனக்கு தீயிட்ட அவர்களை அனைவரையும் மன்னித்து விடுங்கள்’ எனக் கூறிவிட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சிறுமியின் தந்தை உருக்கமாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, ‘ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு நாங்கள் இங்கும் துன்பப்படுகிறோம். தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்கள் இல்லை. ஆனால், கிறித்துவர்களான எங்கள் மீது ஏன் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்?’ என உருக்கமாக பேசியுள்ளார்.
-http://news.lankasri.com