துருக்கியில் திருமணவிழாவின் போது நடந்த வெடி குண்டு தாக்குதலுக்கு 12-14 வயது சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
சிரியா துருக்கி எல்லையில் அமைந்துள்ள காசியந்தெப் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்.
இதனால் 30 பேர் பலியானதாகவும், 100 க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் Recep Tayyip Erdogan கூறியதாவது, இத்தாக்குதல்களுக்கு ஐஎஸ் இயக்கத்தினர் குறைந்தபட்சம் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவனை பயன்படுத்தியுள்ளனர் .
திருமணத்தாக்குதலை தெளிவாக திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதனால் நம் பாதுகாப்பு படையினர் மிக கவனமுடன் செயல்படவேண்டும். தங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் இரத்த வெறி பிடித்தவர்கள், நம் நாட்டை பிரித்து அவர்கள் அதிகாரத்தை செலுத்த வேண்டும் என முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.
-http://news.lankasri.com