பணக்கார நாடுகளில் அமெரிக்காவுக்கு முதல் இடம்! இந்தியா 7வது இடத்தில்

flagsஉலகின் முதல் 10 பணக்கார நாடுகள் கொண்ட பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதல் இடம்பிடித்துள்ள நிலையில், இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

உலகின் பணக்கார நாடுகள் தொடர்பில் ‘நியூ வேல்டு வெல்த்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் முடிவுகளின்படி உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன் மொத்த தனிநபர் சொத்து மதிப்பு 48,900 பில்லியன் டொலராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் சீனா இருக்கின்றது. அதன் மொத்த தனிநபர் சொத்து மதிப்பு 17,400 பில்லியன் டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் 15,100 பில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ள ஜப்பான் இடம்பிடித்துள்ளது. 4வது இடத்தில் இடத்தை இங்கிலாந்து பெற்றுள்ளது.

இதன் மதிப்பு 9,200 பில்லியன் டொலர் ஆகும். தொடர்ந்து 5வது இடத்தில் ஜெர்மனியும், 6வது இடத்தில் பிரான்ஸ் இருக்கின்றது.

இந்தியா 5,600 பில்லியன் டொலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. கனடா 8வது இடத்திலும், அவுஸ்திரேலியா, இத்தாலி முறையே 9 மற்றும் 10வது இடங்களை பெற்றுள்ளது.

தனிநபர்களின் நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கிடப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதன் காரணமாக பண மதிப்பு மிகையாக இருப்பதாக கூறப்படுகிறது.

-http://www.tamilwin.com